பத்ரகாளி அம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2026 05:04
பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி பத்திரகாளி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. 15 நாள் சாமி சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கொடியேற்றம் முடிந்ததும் கைகளில் காப்பு கட்டி கொண்டனர். அம்மனுக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்களுக்கு பொங்கல், பானகம் வழங்கப்பட்டது. ஏப்.28ல் அம்மன் பூ பல்லக்கில் கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு ஆராதனை அபிஷேகங்கள் நடைபெறும். 29ல் மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் படைத்து வழிபடுவர். 30ல் முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூஞ்சோலை சென்றடைவார்.