சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனித்திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2026 10:04
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர். ஏப். 7 ல் பூச்சொரிதல் காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய திருவிழா 9 நாட்கள் நடந்தது. ஏப். 14 ல் பால்குடம், அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துதல், முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்தல், மாவிளக்கு வழிபாடுகள் நடந்தது. நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது.