கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் அன்னபூரணி தாயார் உடனமர் சோற்றுத்துறை நாதர் கோவிலில், 14ம் ஆண்டு திருக்கல்யாண விழா நிகழ்ச்சி 20 ம் தேதி நடக்கிறது. இதில், காலை 6:00 முதல் 8:00 மணிக்குள், திருமஞ்சன அபிஷேக வழிபாடு நடக்கிறது. காலை 9:00 மணிக்கு, முளைப்பாரி, சீர்த்தட்டம் அழைத்து வருதல் நடக்கிறது. காலை 9:30 மணிக்கு, வேள்வி ஆரம்பம் ஆகிறது. காலை 10:00 மணிக்கு, பொற்சுண்ணம் இடித்தல் நடக்கிறது. காலை 11:30 மணிக்கு, வேள்வி நிறைவு பேரொளி வழிபாடு திருமுறை விண்ணப்பம் நடக்கிறது. மதியம் 12:15 மணிக்கு, இறைவன் இறைவி திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு, பொன் ஊஞ்சல் வழிபாடு நடக்கிறது. மதியம் 1:30 மணிக்கு, அன்னம்பாலிப்பு. மாலை 4:00 முதல் 6:00 மணி வரை வள்ளிக்கும்மி நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, கைலாய வாக்கியத்துடன் சுவாமி திருத்தேர் திருவீதி உலா நடக்கிறது.