சிவளாபுரி அம்மன் கோவில் 40ம் ஆண்டு குண்டம் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2026 03:04
அவிநாசி: நடுவச்சேரி சிவளாபுரி அம்மன் கோவிலில் 40ம் ஆண்டு குண்டம் திருவிழா நடைபெற்றது.
சிவளாபுரி அம்மன் கோவில் 40ம் ஆண்டு குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த குண்டம் இறங்கினர். அவிநாசி அடுத்த நடுவச்சேரி ஊராட்சி ஸ்ரீ கோமளவள்ளி உடனமர் கோட்டீஸ்வர சுவாமி கோவிலுக்கு உட்பட்ட ஸ்ரீ சிவளாபுரி அம்மன் கோவிலில் 40ம் ஆண்டு குண்டம் விழாவை முன்னிட்டு, கடந்த 19ம் தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று தீர்த்த குடம், பூச்சட்டி, கரகம் எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து வேல் பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை குதிரை உத்தரவு பெறுதல், படைக்கலம் எடுத்து வருதல் ஆகியவற்றை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த குண்டம் இறங்கினர். நாளை மறு பூஜை,மஞ்சள் நீர், அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறுகிறது. 40ம் ஆண்டு குண்டம் விழாவை முன்னிட்டு விழாக் குழுவினர், முறைக்கட்டுமிராசுகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.