Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ... பாலக்காட்டில் சங்கர ஜெயந்தி விழா கொண்டாட்டம் பாலக்காட்டில் சங்கர ஜெயந்தி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
04:04

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சித்திரை விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று இரவு 7:00 மணிக்கு மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறம் உற்ஸவமூர்த்திகளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. ஹோம வேள்விகள் வளர்க்கப்பட்டது. இன்று காலை 9:30 மணிக்கு மங்களேஸ்வரி அம்மன் சன்னதி முன்புறமுள்ள திருக்கல்யாண மண்டபத்தின் முன்புறமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட பெரிய கொடி மரத்தின் பீடத்திற்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்களால் கொடி பட்டம் ஏற்றப்பட்டு தர்ப்பைப் புற்கள், வஸ்திரம் உள்ளிட்டவைகள் சுற்றிலும் கட்டப்பட்டது. காலைவேளைகளில் உற்ஸவமூர்த்திகள் பல்லக்கிலும், இரவில் பேச்சி, சிம்மம், சிம்மம், அன்னம், கிளி, காமதேனு, ரிஷபம், தாமரை உள்ளிட்ட வாகன சேவைகள் நடக்கிறது. நான்கு ரத வீதிகளிலும் புறப்பாடு நடக்கிறது. வருகிற ஏப்., 30 அன்று மாலை 4:30 மணிக்கு உற்ஸவ மூர்த்திகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பெரிய தேரோட்டம் நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar