Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  சூர்ய பிரபை வாகனத்தில் திருத்தணி ... திருப்புல்லாணியில் ராமானுஜர் ஜென்ம நட்சத்திர உற்ஸவம் திருப்புல்லாணியில் ராமானுஜர் ஜென்ம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி சித்திரை திருவிழா கொடியேற்றதுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

22 ஏப்
2026
06:04

பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.


பழநியில் மேற்கு ரத வீதியில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று (ஏப்.,22ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. மஞ்சள் நிற கொடியில் லட்சுமிநாராயணபெருமாள் துணை என எழுதப்பட்டு, சங்கு, சக்கரம்,திருநாமம்,கருடாழ்வார்,தாம்பூலம்,தீபாராதனை,தட்டு,பஞ்சபாத்திரம், தூபகோல்,மணி,சடாரி உள்ளிட்டவை வரையப்பட்டு இருந்தது. இதனை கொடிக்கம்பத்தின் முன்பு வைத்து கலச பூஜை நடைபெற்றது. கலசநீர் அபிஷேகம் செய்யப்பட்டு காலை 9:40 மணிக்கு கொடி கம்பத்தில் கொடியேற்றம் நடந்தது. லட்சுமிநாராயணபெருமாள், வீதிஉலா நடைபெற்றது. விழாவில் உதவி கமிஷனர் செந்தில்குமார், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் இரவு 7:00 மணிக்கு மேல் சிம்ம வாகனம், சேஷ வாகனம், மரச்சப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி ஊர்வலம் ரத வீதியில் நடைபெறும். ஏப்.28., இரவு 7:29 மணிக்கு மேல் இரவு 8:29 மணிக்குள் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறும். ஒன்பதாம் நாள் திருவிழாவில் ஏப்.30., காலை 8:31 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்தல் நடைபெறும். மே.1., இரவு கொடி இறக்குதலுடன் சித்திரை திருவிழா நிறைவுபெறும். 


பெரியநாயகி அம்மன் கோயிலில் ஏப்.30.,ல் முத்துக்குமாரசுவாமி தங்க குதிரை வாகனத்திலும், வள்ளி, தெய்வானை சப்பரத்திலும் எழுந்தருள்வர்.மே.1., சித்ரா பவுர்ணமி அன்று காலை 8:00 மணிக்கு பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து 108 பால் குடங்கள் திருஆவினன்குடி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வருதல் நடைபெறும். அதன் பின் திரு ஆவினன்குடி கோயிலில் குழந்தை வேலாயுத சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். அன்று இரவு 8:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி,வள்ளி தெய்வானை, வெள்ளி ரதத்தில் எழுந்தருவர். ரத வீதிகளில் புறப்பாடு நடைபெறும். நிகழ்ச்சியினை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar