கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2026 01:04
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், ராமானுஜரின் ஜெயந்தி விழா நடந்தது.
விழாவையொட்டி மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து உற்சவமூர்த்திகள் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத பெருமாள் தாயார் மற்றும் ராமானுஜ ஆச்சாரியார் சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகார வலம் வந்து மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வழிபாடுகளை கோவில் அர்ச்சகர் தேசிக பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.