மடப்புரம் கோயிலில் அம்மனை தரிசனம் செய்த தம்பி ராமையா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2026 04:04
திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையா இன்று காலை தரிசனம் செய்தார்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயிலும் ஒன்று. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தமிழக முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். நேற்று பிரபல திரைப்பட நடிகரும், இயக்குனருமான தம்பி ராமையா தனது குடும்பத்தினர் உடன் அம்மனை தரிசனம் செய்ய வந்திருந்தார். அம்மன் சன்னதி முன் நின்று மனமுருக வேண்டினார். பூஜாரிகள் அவருக்கு கோயில் பிரசாதங்களை வழங்கினர். பிரகாரத்தை வலம் வந்த போது பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்து கொண்டனர். பின் கீழடி தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை பார்வைளட்டார். தொல்லியல் துறை வழிகாட்டி சுதாகர் பொருட்கள் குறித்து விளக்கமளித்தார்.
அவர் பேசும் போது: நான் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவன் தான், அங்கு உள்ள கோட்டைகள், அரண்மனைகளை கண்டு வியந்துள்ளேன். கீழடியில் இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் நகர நாகரீகம் இருந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்கால கருவிகள், இரும்பு கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். விதம் விதமான சுடுமண் பானைகள் பயன்படுத்தியுள்ளனர். இது போன்ற அருங்காட்சியகங்கள் இளைய தலைமுறையினர் நேரில் பார்வையிட்டு பண்டைய கால மக்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் , இம்சை அரசன் 23ம் புலிகேசியின் 2ம் பாகம் உள்ளிட்ட புதிய திரைப்படங்களில் நடித்து வருவதாகவும், மகனின் இயக்கத்தில் சொந்த படம் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.