அன்னூர்: காட்டம்பட்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் பாதயாத்திரை விழா இன்று நடந்தது. காட்டம்பட்டி, அருள்மிகு வெள்ளியங்கிரி ஆண்டவர் மாலை அணிவிப்பு குழு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பாதயாத்திரை விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழா கடந்த இரு வாரங்களாக நடைபெற்றது. இன்று 48 வது ஆண்டாக பக்தர்கள் காவடியுடன் பாதயாத்திரையாக, காட்டம்பட்டியில் இருந்து கோவை வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.