கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2026 10:04
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, அன்று முதல் தினமும் காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வந்தது. 22ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நேற்று மாலை 6:30 மணிக்கு பூங்கரகம் எடுத்து வந்து தீமிதி திருவிழா நடந்தது. ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை முன்னாள் எம்.பி., தன்ராஜ் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.