Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரியமாணிக்கம் திரவுபதியம்மன் ... பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் மே 1ல் சித்திரைத் தேரோட்டம் பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோவிலில் அத்துமீறல் திரிசுதந்திரர்கள் நடனத்தால் சர்ச்சை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோவிலில் அத்துமீறல் திரிசுதந்திரர்கள் நடனத்தால் சர்ச்சை

பதிவு செய்த நாள்

25 ஏப்
2026
10:04

துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணிபுரியும் திரிசுதந்திரர்கள், சித்திரை மாத சஷ்டியை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகளை சமீபத்தில் நடத்தினர். அந்த சமயத்தில், பக்தர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள சண்முகவிலாச மண்டபத்தில் ஒரே நேரத்தில், 50க்கும் மேற்பட்ட திரிசுதந்திரர்கள் செண்டை மேளங்கள் முழங்க ஆட்டம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திரிசுதந்திரர்கள் செயலுக்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவர்கள் கூறியதாவது: கோவிலுக்கு வரும் முருக பக்தர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள சண்முகவிலாச மண்டப பகுதியில், திரிசுதந்திரர்கள் அநாகரிகமான முறையில் ஆட்டம் போடுவதற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது? கோவில் வளாகத்திற்குள் ஆடிப்பாடுவது புனிதத்தை கெடுக்கும் செயல். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர். ஆனால், திரிசுதந்திரர்கள் ஆண்டுதோறும் இதுபோன்று நடனம் ஆடி வருவதாகவும், விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar