பழநி முருகன் கோயிலில் மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2026 04:04
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.
பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வருகை புரிந்தனர். பக்தர்கள் தீர்த்த காவடி, மயில் காவடி எடுத்து மேளதாளத்துடன் கிரிவீதியில் வலம் வந்தனர். வின்ச், ரோப் கார் மூலம் கோயிலுக்கு செல்ல பக்தர்கள், பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் மூன்று மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.