ஆன்மா பிறப்பதாகவும் இறப்பதாகவும் நாம் கொண்டிருக்கும் மூடக் கருத்துகள் எல்லாம் பொருளற்ற பிதற்றல்கள். ஆன்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை, நாம் சாகப் போவதாக பயப்படுவது எல்லாம் வெறும் மூடநம்பிக்கை. என்னால் இதைச் செய்ய முடியும், இதைச் செய்ய முடியாது என்று கூறுவதும்கூடப் பொருளற்றவையே! நம்மால் எதையும் செய்ய முடியும். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஆற்றல்கள் அனைத்தும் ஏற்கெனவே நம்முடையவைதான். நம் கண்களை நாமே கைகளால் மூடிக்கொண்டு இருட்டாக இருக்கிறது என்று அழுகிறோம். நம்மைச் சுற்றி இருள் என்பது இல்லவே இல்லை என்பதை உணருங்கள். கைகளை அகற்றுங்கள். எப்போதும் நிலவிக்கொண்டிருக்கிற அந்த ஒளியைக் காணலாம்.