தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள வரதராஜபுரத்தில் அமைந்துள்ளது சந்தான கிருஷ்ண சுவாமி கோயில். நின்ற கோலத்தில் குழந்தைக் கண்ணனாக குறும்பு கொப்புளிக்க காட்சி தருகிறார் சந்தான கிருஷ்ண சுவாமி. இவருக்கு துளசி மாலை சார்த்தி சிறப்புத் திருமஞ்சனம் செய்து வழிபட்டால்... பிள்ளை வரம் கிடைக்கப் பெறுவார்கள் என்பது ஐதீகம்! கிருஷ்ண ஜயந்தி நாளில் இங்கு வந்து தரிசித்து, பிரார்த்தனை செய்து கொண்டு செல்பவர்கள் ஏராளம். இந்தக் கோயிலில் வந்த அன்னப்ராசனம் செய்தால், ஞானமும் சமயோசித புத்தியும் கொண்டு, தெளிவுற வாழ்வான் அந்தக் குழந்தை என்கிறார்கள் பக்தர்கள்.