வரவூர் மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா: பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2026 11:04
கடலுார்: மாரியம்மன் கோவில், சக்ர செடல் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கடலுார், புதுவண்டிப்பாளைம் வரவூர் மாரியம்மன் கோவில் சித்ரா பவுர்ணமி காளிகா பூஜை திருவிழா கடந்த 27ம் தேதி துவங்கியது. 3ம் நாளான, நேற்று காலை வரவூர் மாரியம்மனுக்கு செடல் போடுதல் விழா நடந்தது. தொடர்ந்து கங்கையம்மன், காளிகா பரமேஸ்வரி, வரவூர் மாரியம்மன் ஆகியோர் சக்ர செடல் தேர் ரதத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை பக்தர்கள் அலகு போட்டு கொண்டனர். அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. இன்று கங்கையம்மன் ஊஞ்சல் உற்சவமும், நாளை சித்ரா பவுர்ணமி காளிபூஜையும் நடக்கிறது.