எல்லம்மாள், எல்லப்பன் கோவில் பொங்கல் விழா: தீர்த்த குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2026 11:05
அவிநாசி: கருமாபாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலகணபதி, ஸ்ரீ எல்லம்மாள், ஸ்ரீ எல்லப்பன் கோவிலில் சித்ரா பௌர்ணமி பொங்கல் விழாவை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம்.
அவிநாசி அடுத்த கருமபாளையம் கிராமம் ,பெரிய வயக்காட்டுத் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள நூத்தல்பட்டியார் குலம் ஸ்ரீ பால கணபதி,ஸ்ரீ எல்லம்மாள், ஸ்ரீ எல்லப்பன் கோவிலில் சித்ரா பௌர்ணமி பொங்கல் விழாவில், கணபதி,துர்கா, லட்சுமி,சரஸ்வதி மற்றும் நவக்கிரக ஹோமங்கள் நடைபெற்றது. நேற்று பொங்கல் விழாவை முன்னிட்டு அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பக்தர்களுக்கு கோவில் திருப்பணி குழு சார்பில் அன்னதானம் வழங்கினர். பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் லட்சுமணன், செயலாளர் கண்ணன், பொருளாளர் ராஜ் உள்ளிட்ட உறுப்பினர்கள் செய்திருந்தனர்.