வடமதுரை பெருமாள் கோயில்களில் சித்ரா பவுர்ணமி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2026 12:05
வடமதுரை: வடமதுரை சவுந்தரரராஜப் பெருமாள் கோயிலில் 76ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று துவங்கியது. கோயிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்ட பெருமாள் சுவாமி, பால்கேணி சென்று மண்டூக முனிவருக்கு வரமளித்தார். இதனை தொடர்ந்து வடமதுரை நகருக்குள் சென்று பல்வேறு திருக்கண்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருக்கண்களில் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் நாளை (மே 3) இரவு வரை நடைபெறும். மே 4 காலை சுவாமி சன்னதி திரும்புவார்.
* பாடியூர் புதுப்பட்டி, நாட்டாண்மைகாரன்பட்டி வீருசக்தி விநாயகர், வீருதும்மம்மாள் மாலை கோயிலில் பெருமாள் அழைப்புடன் துவங்கிய 8ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழாவில், 108 சங்கு பூஜை, யாக வேள்வி, தீர்த்தம், பால் குடம், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட பொங்கல் கூடத்தை வேடசந்துார் காந்திராஜன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை ஒக்கலிகர் தசிரிவார் குல தாயாதிகள் செய்திருந்தனர்.
* தென்னம்பட்டியில் சவடம்மன், நந்தீஸ்வரன் கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. பல்வேறு கிராமங்களில் வசிக்கும் கோயில் தலைகட்டுதாரர்கள், குடும்ப உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக மாலை அணிந்து விரதமிருந்தனர். நேற்று அவரவர் ஊர்களில் இருந்து பால் குடங்களுடன் பாதயாத்திரை ஊர்வலமாக வந்து சன்னதிகளில் பாலாபிஷேகம் செய்து வழிப்பட்டனர்.