Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

02 மே
2026
12:05

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே மேலத்துாவலில் 1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.


மேலத்துாவலில் பழமையான சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளதாக அப்பகுதி வேல்முருகன் சமீபத்தில் போலீசில் தெரிவித்தார். அந்த தகவலை அறிந்த சென்னை அகிம்சை நடைக்குழுவைச் சேர்ந்த தமிழ்ச் சமணர்கள் உள்ளூர் மக்கள் உதவியுடன் எளிமையாக ஒரு பள்ளி கட்டி பாதுகாக்க ஏற்பாடு செய்தனர்.தற்போது அவ்வூரில் நடந்த கும்பாபிஷேகத்தின் போது மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருந்த மகாவீரர் சிற்பத்துக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.


தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ராஜகுரு கூறியதாவது: வணிக பாதைகளில் அதிகளவில் சமணப்பள்ளிகளை காணலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிழக்கு கடற்கரைப் பெருவழி, ராமநாதபுரம் –மதுரை பெருவழி, தொண்டியிலிருந்து ஆனந்துார் வழியாக மதுரை செல்லும் பெருவழியில் சமண மதம் பரவியிருந்தற்கான தடயங்களும், தீர்த்தங்கரர் சிற்பங்களும் கிடைத்துள்ளன. தற்போது மேலத்துாவலில் 3 அடி உயரம், 2 அடி அகலம் உள்ள கருங்கல் சிற்பத்தில் தாமரைப்பீடத்தின் மேல் மகரத் தண்டுள்ள சிம்மாசனத்தில் அர்த்தபரியங்க ஆசனத்தில் அசோக மரத்தின் கீழ் அமர்ந்த நிலையில் மகாவீரர் காட்சியளிக்கிறார். அவர் தலையின் மீது முக்குடை அமைப்பும், பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டமும் உள்ளன. இரு சாமரதாரிகள் அவரின் இருபுறமும் உள்ளனர். அதில் உள்ள முக்குடை சமண சமயச் சின்னம் ஆகும். இந்த சிற்பம் 11-ம் நுாற்றாண்டை சேர்ந்தது.


பெரும்பாலான வணிக வழித்தடங்களில் தீர்த்தங்கரர் சிற்பத்தை மட்டும் வைத்து வழிபட்டனர். அத்தகைய ஒரு சமணப்பள்ளி மேலத்துாவலில் உள்ளது. அப்பகுதியை சுற்றியுள்ள 20 ஏக்கரில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இதன் மூலம் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலத்தில் மக்கள் குடியிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar