திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மொளசூரில் லட்சுமி குபேர திருக்கல்யாணம் நடந்தது. திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் உள்ள மொளசூர், கோவடி ரோட்டில் உள்ள லட்சுமி குபேர கோவிலில், நேற்று இரவு 7:00 மணியளவில், வைஸ்ரவணன் (எ) குபேரனுக்கும், ரிதி (எ) சித்ரலோகவிற்கும் திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருமண தடை உள்ளவர்கள் திருமாங்கல்யம் சாற்றி வேண்டிக்கொண்டனர்.