Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 5 முகங்கள் கொண்ட சிவன் சிலை துமகூரின் ... நாகதோஷத்தை நீக்கும் ஸ்ரீநாகேஸ்வர சுவாமி நாகதோஷத்தை நீக்கும் ஸ்ரீநாகேஸ்வர ...
முதல் பக்கம் » துளிகள்
மகிஷாசூரனை பக்தர்கள் வழிபடும் அதிசய கோவில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2026
11:05

ஹிந்து புராணங்களின்படி மகிஷாசூரன் என்பவர் சக்தி வாய்ந்த அசுரனாக பார்க்கப்படுகிறார். பாதி மனிதனாகவும், பாதி எருமையாகவும் உருமாறும் திறன் கொண்டவர். மக்களை கொடுமைப்படுத்திய அவரை காளி வதம் செய்ததால், அதனை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 9 நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

ஆனாலும், மகிஷாசூரனை சிலர் தங்களின் கடவுள் என்று கூறி வழிபடுகின்றனர். அவருக்காக ஒரு கோவிலும் கட்டப்பட்டு உள்ளது என்றால் நம்ப முடிகிறதா... ஆனால், அதுதான் உண்மை.

கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உடுப்பியின் பர்கூரில் மகிஷாசூரன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து, மகிஷாசூரனின் சிலையை வழிபட்டு செல்கின்றனர். ஆண்டிற்கு ஒரு முறை தொட்டில் சேவை நிகழ்ச்சியும் இங்கு நடக்கிறது.

மகி என்றால் பூமி. ஈஷா என்றால், கடவுள் அல்லது பேரரசர் என்று பொருள்படுவதால், மகிஷாசூரனை வணங்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கோவிலின் அர்ச்சகரான பாஸ்கர் சாஸ்திரி கூறுகையில், ‘‘சிவபெருமானின் முதல் வடிவம் என்பதால் மகிஷாவை பக்தர்கள் தினமும் வழிபட்டு செல்கின்றனர். இந்த இடம் முன்பு மகிஷா மண்டலம் என்றே அழைக்கப்பட்டது.

கருவறையில் உள்ள மகிஷாசூரன் சிலை, கொம்புகளுடைய தலைகளுடன் கூடிய மனித உடலை கொண்டதாக உள்ளது,’’ என்றார்.

பொதுவாக, கடலோர மாவட்டங்கள் அதன் தனித்துவமான பாரம்பரியங்களுக்கு பெயர் பெற்றது என்பதற்கு, மகிஷாசூரனுக்கு கோவில் கட்டப்பட்டதே உதாரணம். கோவில் நடை தினமும் காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரையும் திறந்து இருக்கும். உடுப்பிக்கு சுற்றுலா செல்வோர், இந்த அதிசய கோவிலையும் ஒரு முறை பார்த்து வரலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஹாசன் மாவட்டம், நவிலே கிராமத்தில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ நாகேஸ்வரா சுவாமி கோவில் அமைந்து ... மேலும்
 
temple news
பெங்களூருக்கு அருகில் அமைந்துள்ள துமகூரு டவுன் பட்டவாடி பகுதியில் ஏ.பி.எம்.சி., எனும் வேளாண் விளைபொருள் ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு என்றால், இயற்கை அழகு கொட்டி கிடக்கும் மாவட்டம். சிக்கமகளூரு பெயரை கேட்டாலே மலைகள், இயற்கை ... மேலும்
 
temple news
பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால், ஒன்று அல்லது இரண்டு கடவுள்களை தரிசிக்கலாம். ஆனால் மைசூரில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar