Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்திரமேரூர் சுந்தர வரதராஜப் ... குழந்தை வரம் அளிக்கும் வேணுகோபால சுவாமி குழந்தை வரம் அளிக்கும் வேணுகோபால ...
முதல் பக்கம் » துளிகள்
விஷ்ணுவின் அவதாரங்களை தரிசிக்கணுமா? லட்சுமிகாந்த சுவாமி கோவிலுக்கு வாங்க!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விஷ்ணுவின் அவதாரங்களை தரிசிக்கணுமா? லட்சுமிகாந்த சுவாமி கோவிலுக்கு வாங்க!

பதிவு செய்த நாள்

03 மே
2026
11:05

பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால், ஒன்று அல்லது இரண்டு கடவுள்களை தரிசிக்கலாம். ஆனால் மைசூரில் உள்ள கோவில் வளாகத்தில், விஷ்ணுவின் அனைத்து அவதாரங்களையும் தரிசிக்கலாம். அற்புதமான இந்த கோவிலை தரிசிக்க பக்தர்கள் குவிகின்றனர்.

மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு தாலுகாவில் களலே என்ற சிறு கிராமம் உள்ளது. இங்கு 18ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட லட்சுமிகாந்த சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வளாகத்தில், விஷ்ணுவின் பல அவதாரங்களை காணலாம்.

சாந்த சொரூபம் கோவிலில் நுழைந்தால், சாந்த சொரூபமான கேசவசுவாமி, வீரமான தோற்றத்தில் வில்லை ஏந்திய கோதண்டசுவாமி, வரங்களை அள்ளித்தரும் வரதராஜ சுவாமி உட்பட பல்வேறு அவதாரங்கள் பக்தர்களை மகிழ்விக்கின்றன.

ராமனின் பட்டாபிஷேக வைபவத்தை கூறும் பட்டாபிராமர், பசுக்களுடன் காட்சி தரும் ராஜகோபால சுவாமி, செழிப்பின் அடையாளமான லட்சுமி நாராயணர், திருப்பதி ஏழுமலையானை நினைவூட்டும் வெங்கடாசலபதியும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யலாம்.

களலே மன்னர்கள் ஆட்சியில், இக்கோவில் கட்டப்பட்டது. இவர்களின் குலதெய்வமாக விளங்கியது லட்சுமிகாந்த சுவாமி. இங்கு லட்சுமிகாந்த சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். அரவிந்த நாயகி, ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களின் சிலைகளும் இங்குள்ளன.

நம்பிக்கை பழைய காலத்து சிற்பக்கலை மற்றும் வைஷ்ணவ பாரம்பரியத்துக்கு, எடுத்துக்காட்டாக இக்கோவில் உள்ளது. ஆன்மிகவாதிகளுக்கு சொர்க்கமாகும். தொடர் கஷ்டங்களால் அவதிப்படும் பக்தர்கள், இங்கு வந்து விஷ்ணுவின் அவதாரங்களை தரிசித்தால், வாழ்வில் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. நஞ்சன்கூடின் நஞ்சுண்டேஸ்வரரை தரிசனம் செய்ய செல்லும் போது, லட்சுமிகாந்தரின் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்ய மறக்காதீர்கள்.



எப்படி செல்வது?

பெங்களூரில் இருந்து 163 கி.மீ., மாண்டியாவில் இருந்து 64 கி.மீ., மைசூரில் இருந்து 24 கி.மீ., தொலைவில் நஞ்சன்கூடு உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், நஞ்சன்கூடுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. மைசூரில் விமான நிலையம் இருப்பதால், விமானத்திலும் செல்லலாம். மைசூரில் இறங்கி வாடகை வாகனத்தில், கோவிலுக்கு செல்லலாம்.

தரிசன நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை.

தொடர்பு எண்: 80223 52828

அருகில் உள்ள கோவில்கள்: ஸ்ரீகண்டேஸ்வரா கோவில், பரசுராமர் கோவில், தலக்காடு பஞ்சலிங்க கோவில்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar