தவெக தலைவர் விஜய் முதல்வராக வேண்டி குத்துவிளக்கு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2026 04:05
அவிநாசி: அவிநாசி நகர தவெக மகளிர் அணி சார்பில், தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவி ஏற்க வேண்டி 50க்கும் மேற்பட்ட பெண்கள் குத்தவிளக்கு வழிபாடு நடத்தினர். தமிழகத்தில் நடந்து முடிந்த 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சியினர் 108 இடங்களை கைப்பற்றினர். தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்க தயார் நிலையில் இருந்தும்,பல்வேறு தடைகள் மற்றும் ஆட்சியில் முதல்வராக அமர காலதாமதம் ஆவதை முன்னிட்டு,தமிழகத்தில் தவெக தலைவர் விஜய், விரைவில் முதல்வராக பதவி ஏற்க,வேண்டி அவிநாசி நகர தவெக அணியினர் குத்துவிளக்கு வழிபாடு நடத்தினர். அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஆனந்தாஸ் ஹோட்டல் அரங்கில் அவிநாசி நகர தவெக மகளிர் அணி சார்பில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டனர். முன்னதாக கணபதி, மகாலட்சுமி, நவகிரகம் உள்ளிட்ட பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தவெக மகளிர் அணியினர் தலைவர் விஜய் முதல்வராக வேண்டி, கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.