Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: வைகாசி ராசி பலன் மிதுனம் : வைகாசி ராசி பலன் மிதுனம் : வைகாசி ராசி பலன்
முதல் பக்கம் » வைகாசி ராசி பலன் ((15.5.2026 முதல் 14.6.2026 வரை)
ரிஷபம் : வைகாசி ராசி பலன்
எழுத்தின் அளவு:
ரிஷபம் : வைகாசி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 மே
2026
01:05

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்


கவுரவமாகவும் செல்வாக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் சுக ஸ்தானாதிபதி சூரியன் மாதம் முழுவதும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் உற்சாகமாக செயல்படுவீர். உங்களிடம் இருந்த மந்த நிலை விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையின் ஆதரவால் முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர். அரசு வழி முயற்சி சாதகமாகும். சுக ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கவனமாக இருப்பது நல்லது.  வேலை பளு மற்றும் அலைச்சலின் காரணமாக உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை அவசியம். 

மே 26 வரை குரு பார்வையோடு ஜீவன ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டில் பணியாற்றுபவர்களுக்கு நிம்மதி உண்டாகும். 

ராசிநாதன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பொருள் வரவு அதிகரிக்கும். கையில் பணம் புரளும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உருவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் அமையும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லுாரியில் இடம் கிடைக்கும். விவசாயிகள் இந்த மாதத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது.

சந்திராஷ்டமம்: ஜூன் 1, 2. 

அதிர்ஷ்ட நாள்: மே 15, 19, 24, 28. ஜூன் 6, 10.

பரிகாரம்: சரபேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


ரோகிணி: ஆடம்பரமாக வாழ வேண்டும், பிறர் மனதில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான மாதம். 

இதுவரை நீங்கள் அடைந்து வந்த சங்கடம் இனி இருந்த இடம் தெரியாமல் போகும். 

மே 26 வரை வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அதிகரிப்பார். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்களை நீக்குவார். இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு சாதகமாக்குவார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போர் நிலையில் உயர்வை உண்டாக்குவார். மறைமுக எதிர்ப்புகளை இல்லாமல் செய்வார். செய்து வரும் தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். பார்த்து வரும் வேலையில் உயர்வு உண்டாகும். 

மே 26 முதல் உச்சமாகும் குரு 7,9,11 ம் இடங்களைப் பார்ப்பதால் திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு மணமாலை தோளில் ஏறும்.  தம்பதிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். பிரிந்து வாழ்ந்தவர்களும் சேர்ந்து வாழக்கூடிய நிலை உண்டாகும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சிலருக்கு சொந்த இடம் வீடு அமையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் அடையும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உடல் நிலையில் கவனமாக இருப்பது நல்லது. விவசாயிகள் அவசரப்போக்கை கை விடுவது அவசியம். மாணவர்கள் விருப்பமான பாடப்பிரிவில் விரும்பிய கல்லுாரியில் சேர்வர்.

சந்திராஷ்டமம்: ஜூன் 2, 3.

அதிர்ஷ்ட நாள்: மே 15, 20, 24, 29. ஜூன் 6, 11.

பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்

தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ரத்தக்காரகன் செவ்வாய் மாதம் முழுவதும் விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். சிலருக்கு உடல் நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். சிலர் தங்களுக்கு சொந்தமான இடத்தை விற்று புதிய முயற்சிகளை மேற்கொள்வீர். ஒவ்வொரு வேலையும் திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போகும். உங்கள் தர்ம கர்மாதிபதி சனி பகவான் லாப ஸ்தானத்தில்  சஞ்சரிப்பதால் மலையளவு வரும் துன்பம் கூட கடுகளவாக மாறும். அனைத்தையும் எதிர் கொள்ளக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். தேவைக்கேற்ற வருமானம் வரும். உங்கள் லாபாதிபதி குரு, தனது சஞ்சாரங்களாலும், பார்வைகளாலும் மாதம் முழுவதும் யோகப் பலன்களை அள்ளி வழங்குவார். குடும்பம் தொழில் உத்தியோகத்தில் நிம்மதி இருக்கும். எந்தவிதமான பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொள்ளக்கூடிய நிலை உருவாகும். மறைந்து  இருக்கும் திறமை வெளிப்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வழக்கு சாதகமாகும். தடைபட்ட பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். வருமானம் உயரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு நிலை மாறும். உங்கள் தனக்காரகன் புதனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் மனம் தெளிவாகும். பயணத்தின் வழியே எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் தேடிவரும். வங்கியில் கேட்ட லோன் கிடைக்கும். பங்குச் சந்தையில் ஏற்பட்ட இழப்புகளை சரிகட்டுவீர். சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் ஆடை ஆபரணம் சேரும். பொன் பொருள் வாங்க வேண்டும் என்ற முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய இடம் வீடு வாகனம் அமையும் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். திருமண வயதினருக்கு வரன் அமையும். சிலருக்கு மணமாலை ஏறும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும் விவசாயிகள் எல்லாவற்றிலும் கவனமாக இருப்பது அவசியம். வயதானவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.


சந்திராஷ்டமம்: ஜூன் 3, 4.

அதிர்ஷ்ட நாள்: மே 15, 18, 24, 27. ஜூன் 6, 9.


பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.

 
மேலும் வைகாசி ராசி பலன் ((15.5.2026 முதல் 14.6.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: எது நடந்தாலும் அது நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்துணிச்சலாக செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்சோதனைகளையும் சாதனைகளாக மாற்றிடும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் வென்று காட்டக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்நிதானமாக செயல்பட்டாலும் நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar