Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி ராசி பலன்: ரிஷபம் .. சங்கடங்கள் ... ஐப்பசி ராசி பலன்: கடகம்.. சங்கடங்கள் விலகும்.. உங்கள் எதிரி அருகிலேயே இருப்பாங்க கவனம் ..! ஐப்பசி ராசி பலன்: கடகம்.. சங்கடங்கள் ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
ஐப்பசி ராசி பலன்: மிதுனம்.. யோசிக்காம எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐப்பசி ராசி பலன்: மிதுனம்.. யோசிக்காம எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம்!

பதிவு செய்த நாள்

16 அக்
2026
02:10

மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரியகாரகனான செவ்வாய் நீச்சம் அடைந்திருப்பதால் எதிர்ப்பு போட்டி விலகும். ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் என்றாலும், ஜீவன ஸ்தானத்தில் தொழில்காரகன் சனி பகவான் வக்கிரமாக சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நன்மையளிக்கும். மேல் அதிகாரியின் ஆலோசனையின்படி செயல்படுவதால் உங்களுக்கு வரும் பிரச்னைகள் விலகிப்போகும். மாதத்தின் கடைசியில் ராகு அஷ்டம ஸ்தானத்திற்கும், கேது தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கும் பெயர்ச்சியாவதால் அனைத்திலும் நிதானம் தேவை. யோசிக்காமல் எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும், பண விவகாரங்களில் கவனமாக இருப்பதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும் நன்மையளிக்கும். மறைமுகத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். யாரை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் யாரை விலக்கி வைக்க வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். உடல் நிலையிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். பெண்கள் வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்பது அவசியம். புதிய நட்புகளிடம் ஓரடி விலகி இருப்பது உங்கள் கவுரவத்தை பாதுகாக்கும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனை ஏற்பது நன்மையளிக்கும்.


சந்திராஷ்டமம்: அக். 18, 19. நவ. 15.

அதிர்ஷ்ட நாள்: அக். 23, 27. நவ. 5, 9, 14.


பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட நன்மை உண்டாகும். எதிர்ப்பு விலகும்.


திருவாதிரை: உயர்ந்த லட்சியத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ஒவ்வொன்றிலும் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். நவ. 13 வரை பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும், சகாய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். நினைப்பது நடந்தேறும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். மற்றவரால் முடியாத வேலைகளையும் உங்களால் முடிக்க முடியும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலை இருக்கும். சிலருக்கு சொந்த இடம் வீடு வாகனம் வாங்கும் கனவு நனவாகும். வரவேண்டிய பணம் வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பும் தேடிவரும். என்றாலும் மாதத்தின் கடைசியில் ராகு கேது பெயர்ச்சி அடைவதால் அதன்பின் எச்சரிக்கையாக இருப்பது நன்மையளிக்கும். உங்கள் வளர்ச்சியின் காரணமாக சிலர் உங்கள் மீது அவதூறு பரப்ப வாய்ப்பிருப்பதால் அதைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்லுங்கள். உடல்நிலையிலும், குடும்பத்திலும், தொழிலிலும் அக்கறை கொள்ளுங்கள். ஆத்ம காரகன் சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் அடைந்திருப்பதால் செயல்களில் கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நன்மையளிக்கும். பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் பேசித் தீர்ப்பது அவசியம். செவ்வாய் நீச்சம் அடைந்திருப்பதால் விவசாயிகள் கவனமாக செயல்படுவது அவசியம். பெண்கள் குடும்பத்தினர் வார்த்தைகளை ஏற்பதால் பிரச்னைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். மூத்த குடிமக்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியம். வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்வதற்குமுன் சந்தை நிலவரம் அறிந்து செயல்படவும். ஷேர் மார்க்கெட் விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவது அவசியம்.


சந்திராஷ்டமம்: அக். 19, 20. நவ. 15, 16.

அதிர்ஷ்ட நாள்: அக். 22, 23, 31. நவ. 4, 5, 13, 14.


பரிகாரம்: விஷ்ணு துர்க்கையை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும். ஆரோக்கியம் மேம்படும்.


புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: நியாயம் தர்மம் முன்னேற்றம் என்ற கொள்கையோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் குரு பகவான் இரண்டாம் இடமான குடும்ப ஸ்தானத்திலும், அக். 20 முதல் சகாய ஸ்தானத்திலும் சஞ்சரித்து பலன்கள் வழங்கிட இருக்கிறார். மூன்றாமிட குருவின் பார்வைகள் உங்கள் ராசிக்கு ஏழு, ஒன்பது, பதினொன்றாம் இடங்களுக்கு உண்டாவதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். பிரச்னைகள் காரணமாக பிரிந்திருந்த தம்பதிகளும், டைவர்ஸ் கேட்டு நீதிமன்றம் வரையில் சென்றவர்களும் மீண்டும் ஒன்று சேரக்கூடிய நிலை ஏற்படும்.  நண்பர்களுக்குள் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கூட்டுத் தொழில் ஆதாயம் தரும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பொது வாழ்க்கையில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி தேடிவரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைய முடியும். வரவேண்டிய பணம் வரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். திருமண வயதினருக்கு வரன் அமையும். வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும் என்றாலும், உடல் நிலையில் கவனம் செலுத்துவதும், உடன் இருப்பவர்களின் ஆலோசனைக்கு மதிப்பளிப்பதும் அவசியம். சிலர் உங்களைப்பற்றி அவதூறு பரப்பலாம் என்றாலும் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம். மாதத்தின் கடைசியில் ராகு கேது பெயர்ச்சி ஆவதால் அனைத்திலும் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் எடுப்பது அவசியம். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும்.


சந்திராஷ்டமம்: அக். 20.

அதிர்ஷ்ட நாள்: அக். 21, 23, 30. நவ. 3, 5, 12, 14.


பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 
temple news
கன்னி.. உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: எந்த இடத்திலும் முதன்மையாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar