Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி ராசி பலன்: மிதுனம்.. யோசிக்காம ... ஐப்பசி ராசி பலன்: சிம்மம்.. நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு இது கவனமாக செயல்பட வேண்டியது அவசியம்! ஐப்பசி ராசி பலன்: சிம்மம்.. நினைத்ததை ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
ஐப்பசி ராசி பலன்: கடகம்.. சங்கடங்கள் விலகும்.. உங்கள் எதிரி அருகிலேயே இருப்பாங்க கவனம் ..!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐப்பசி ராசி பலன்: கடகம்.. சங்கடங்கள் விலகும்.. உங்கள் எதிரி அருகிலேயே இருப்பாங்க கவனம் ..!

பதிவு செய்த நாள்

16 அக்
2026
03:10

கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் ஜென்ம ராசிக்குள் சஞ்சருக்கும் குரு, அக். 20 முதல் அதிசாரமாக தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு செல்கிறார். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வார்த்தைகளில் தெளிவு உண்டாகும். பணவரவில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். கையில் பணம் புரளும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்ப குருவின் பார்வைகள் 6, 8, 10 ம் இடங்களுக்கு உண்டாவதால் செய்து வரும் தொழில் விருத்தியாகும். புதிய முயற்சிகள் லாபம் தரும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள், நெருக்கடிகள் நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடம்பில் இருந்த பிரச்னைகள், நோய் நொடி என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரம் தொழிலில் போட்டி பிரச்னை என்றிருந்த நிலை மாறும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். நவ. 13 முதல் ராகு சப்தம ஸ்தானத்திலும், கேது ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிப்பதால் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். புதிய நட்புகளிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையளிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்பதும். நிதானித்து செயல்படுவதும் அவசியம். விவசாயிகளுக்கு விளைச்சலில் அக்கறை தேவைப்படும். மாணவர்களுக்கு குழப்பம் விலகும் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.


சந்திராஷ்டமம்: அக். 21.

அதிர்ஷ்ட நாள்: அக். 20, 23, 29, 30. நவ. 2, 3, 11, 12.


பரிகாரம்: சட்டநாதரை வழிபட சங்கடங்கள் விலகும். வழக்கு வெற்றியாகும்.


பூசம்: எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் உங்களிடம் அதிகபட்சமான வேகம் இருக்கும். சில நேரங்களில் மனக்குழப்பமும் ஏற்படும். நடக்காத ஒன்றை நினைத்து சிலர் பயந்து கொண்டிருப்பீர்கள். அதே நேரத்தில் ஒரு வேலையை எடுத்து விட்டால் அதை நடத்தி முடிப்பதில் உறுதியாக இருப்பீர்கள். வியாபாரம் தொழில் லாபம் தரும். அக். 31 முதல் உங்கள் சகாய ஸ்தானாதிபதி புதன் வக்கிர நிவர்த்தி அடைவதால் உங்கள் திறமை பளிச்சிடும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். ஜென்ம ராசியை விட்டு அக். 20 முதல் குரு விலகுவதால் அலைச்சல் குறையும். கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் என்று வாழ்ந்த நிலை மாறும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். புதிய பொருள் சேரும். உங்கள் ஜீவனாதிபதி செவ்வாய் ராசிக்குள் நீச்சம் அடைந்திருப்பதால் செய்து வரும் தொழில்மீது கூடுதல் கவனம் தேவைப்படும். அவசரப்பட்டு எந்த வேலையிலும் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாக வேண்டாம். எந்த ஒன்றாக இருந்தாலும் அதனால் ஏற்படப்பபோகும் பின் விளைவுகள் பற்றியும் ஆலோசிப்பது அவசியம். களத்திரக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சுக ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் உறவினருடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் மேம்படும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய வாகனம் ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். ஜான்ம ராசிக்குள் செவ்வாய் நீச்சம் அடைந்திருப்பதால் விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.


சந்திராஷ்டமம்: அக். 21, 22.

சந்திராஷ்டமம்: அக். 18, 20, 27, 29.


பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டுவர நன்மை உண்டாகும்.


ஆயில்யம்: திட்டங்கள் தீட்டி அதைச் செயல்படுத்துவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் சகாய ஸ்தானாதிபதி புதன் மாதத்தின் தொடக்கத்தில் வக்கிரமாக சஞ்சரித்தாலும் அக். 31 முதல் வக்கிர நிவர்த்தி அடைகிறார். இதனால் தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வருமானம் உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் தன குடும்பாதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் நீச்சம் அடைந்திருப்பதால் உங்கள் மனதில் இருந்த பயம், குழப்பம் எல்லாம் விலகும். ஆரோக்கியம் சீராகும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும் என்றாலும், நவ. 13 வரை அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், குடும்ப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். சிலருக்கு எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஒவ்வொரு செயலிலும் வேலைகளிலும் கவனமாக இருப்பதும் சூழ்நிலை அறிந்து செயல்படுவதும் அவசியம். உங்கள் வார்த்தைகளே உங்களுக்கு எதிரியாக மாறக்கூடும் என்பதால் வார்த்தைகளில் நிதானம் வேண்டும். பண விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் அவர்கள் ஆலோசனைகளை ஏற்பதும் நன்மையளிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். விவசாயிகள் அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பெண்கள் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை இல்லாமல் எந்த வேலைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு இருந்த பிரச்னைகள் விலகும். படிப்பில் ஆர்வம் கூடும்.


சந்திராஷ்டமம்: அக். 22, 23.

அதிர்ஷ்ட நாள்: அக். 20, 29. நவ. 2, 5, 11, 14.


பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும். சங்கடங்கள் விலகும்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 
temple news
கன்னி.. உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: எந்த இடத்திலும் முதன்மையாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar