Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் புரட்டாசி மாத ராசிபலன் ஐப்பசி ராசி பலன்: ரிஷபம் .. சங்கடங்கள் விலகும்.. எடுத்த வேலைகள் வெற்றியாகும்! ஐப்பசி ராசி பலன்: ரிஷபம் .. சங்கடங்கள் ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
ஐப்பசி ராசி பலன்: நீங்க மேஷமா.. இந்த மாதம் அமோகம் தான்.. இதை மட்டும் செய்யாதீங்க..!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐப்பசி ராசி பலன்: நீங்க மேஷமா.. இந்த மாதம் அமோகம் தான்.. இதை மட்டும் செய்யாதீங்க..!

பதிவு செய்த நாள்

16 அக்
2026
02:10

மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து, மனக்குழப்பத்தை வழங்கிவரும் ஞான மோட்சக்காரகன் கேது நவ. 13 ம் தேதி கடகத்திற்கு பெயர்ச்சியாவதால் மனக்குழப்பம் விலகும். தவறான நண்பர்கள் உங்களை விட்டு விலகுவர். உழைப்பின் மீது கவனம் செல்லும். கடினமான வேலைகளையும் போராடி முடித்திடக்கூடிய திறமை உண்டாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத்தேடி வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அக். 20 ம் தேதி மங்களக்காரகன் குரு அதிசாரமாக சிம்ம ராசிக்குள் செல்வதால் உங்கள் நிலை உயரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். எடுத்த வேலைகள் முடிவிற்குவரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வரவும் வசதியும் அதிகரிக்கும். பட்டம் பதவி தேடிவரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும்.


சந்திராஷ்டமம்: நவ. 10.

அதிர்ஷ்ட நாள்: அக். 18, 25, 27. நவ. 7, 9, 16.


பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும்.


பரணி: வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டே பழகிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் தன குடும்பாதிபதியும் சப்தமாதிபதியுமான சுக்கிரன் மாதம் முழுவதும் வக்கிரம் அடைந்திருப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாத அளவிற்கு சூழ்நிலை உங்களுக்கு எதிராக மாறும்.  வாழ்க்கைத்துணையுடன் இணக்கமற்ற நிலையும் உருவாக வாய்ப்பிருப்பதால்  அனுசரித்துச்செல்வது நன்மையளிக்கும். ஆடம்பரம், ஆசை என்பதற்கெல்லாம் இந்த நேரத்தில் இடம் கொடுக்க வேண்டாம். உங்கள் சகாய ஸ்தானதிபதி புதனும் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். மனம் குழப்பத்திற்கு ஆளாகும். சிலர் நரம்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு ஆளாவீர்கள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது அதற்கு எதிரானதாகவும் இருக்கும். இந்த நேரத்தில் மாதம் முழுவதும் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சூரியனும் நீச்சம் அடைந்திருப்பதால் அரசு பணியில் இருப்பவர்களும் அரசியல்வாதிகளும் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையளிக்கும். நீர் ராசியில் பூமிக்காரகன் செவ்வாய் நீச்சமடைந்திருப்பதால் விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். அறுவடைக்குரிய காலம் வந்ததும் காலம் தாழ்த்தாமல் செயல்படுவது அவசியம். வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் அடைந்து வந்தவர்களுக்கு தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படும். அச்ச உணர்வு மேலோங்கும். சிலருக்கு வரவை விட செலவு அதிகரிக்கும். இந்த மாதம் முழுவதும் வியாபாரிகள் புதிய முதலீட்டில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும் என்றாலும், அக். 20 முதல் குருப்பார்வை ராசிக்கு கிடைப்பதால் எந்த விதமான நெருக்கடி வந்தாலும் அதையெல்லாம் உங்களால் சமாளித்துக் கொள்ள முடியும். தேவைக்கேற்ற பணம் வரும். கௌரவமும் செல்வாக்கும் நீடிக்கும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் எடுப்பது அவசியம்.


சந்திராஷ்டமம்: நவ. 11.

அதிர்ஷ்ட நாள்: அக். 18, 24, 27. நவ. 6, 9, 15.


பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.


கார்த்திகை 1 ம் பாதம்: ஆயிரம் யானைகளுக்கு மத்தியில் சிங்கம்போல் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சூரியன் மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் நீச்சம் அடைவதுடன், ராசிநாதன் செவ்வாயும் நீச்சமடைகிறார். இதனால் கடந்த மாதத்தில் கிடைத்த நற்பலன்களில் மாற்றம் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். உங்கள் இயல்பான நிலையிலும் மாற்றம் ஏற்படும். வேகம், வீரம், நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் என்றிருந்த நிலையெல்லாம் மாறும். சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் உங்களை மாற்றும். நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேலைகளிலும் தடை தாமதம் என்று ஏற்படும். உத்தியோகத்தில் சிற்சில சங்கடங்கள் போராட்டம் என்று நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும் சுய ஜாதகத்தில் தசா புத்தி சாதகமாக இருப்பவர்களுக்கு இந்த நிலைகள் நெருங்காமல் போகும். சப்தம ஸ்தானாதிபதியும் வக்கிரம் அடைந்திருப்பதால் தம்பதிக்குள்ளும் ஏதாகிலும் ஒரு பிரச்னை ஓடிக்கொண்டிருக்கும். நன்றாகப் பழகி வந்த நண்பர்களுக்குள்ளும் இடைவெளி ஏற்படும் என்பதால் மனதில் நிம்மதியற்ற நிலை இருக்கும் என்பதால் தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வது இந்த நேரத்தில் நன்மையை உண்டாக்கும். பெரியோர் ஆலோசனையை ஏற்பதும், திட்டமிட்டு செயல்படுவதும், வியாபாரம் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவதும் அவசியம். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். கூட்டுத்தொழில் எதிர்பார்த்த அளவிற்க்கு இந்த மாதத்தில் பலன் தராமல் போகும். நவ. 13 முதல் யோகக்காரகன் ராகு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் உங்களை ஈடுபடச் சொல்லும் என்றாலும் சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நன்மையாகும். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும்.


சந்திராஷ்டமம்: நவ. 12.

அதிர்ஷ்ட நாள்: அக். 18, 19, 27, 28. நவ. 1, 9, 10.


பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். 

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 
temple news
கன்னி.. உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: எந்த இடத்திலும் முதன்மையாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar