Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐப்பசி ராசி பலன்: நீங்க மேஷமா.. இந்த ... ஐப்பசி ராசி பலன்: மிதுனம்.. யோசிக்காம எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம்! ஐப்பசி ராசி பலன்: மிதுனம்.. யோசிக்காம ...
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
ஐப்பசி ராசி பலன்: ரிஷபம் .. சங்கடங்கள் விலகும்.. எடுத்த வேலைகள் வெற்றியாகும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐப்பசி ராசி பலன்: ரிஷபம் .. சங்கடங்கள் விலகும்.. எடுத்த வேலைகள் வெற்றியாகும்!

பதிவு செய்த நாள்

16 அக்
2026
02:10

ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஆத்ம காரகன் சூரியன் சத்துரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் மாதம் முழுவதும் நீச்சமடைந்திருப்பதால் உங்கள் வேலைகளில் நிதானமும் ஆரோக்கியத்தில் கவனமும் வேண்டும். வம்பு வழக்கு என்ற நிலையும் சிலருக்கு ஏற்படும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வியாபாரத்தில் போட்டியும் பிரச்னைகளும் அதிகரிக்கும். குடும்பத்திலும் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்பட்டு உங்கள் மனதை சங்கடப்படுத்தும் என்றாலும், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்லும் குரு பகவானின் பார்வைகள் உங்கள் ராசிக்கு 8, 10, 12 ம் இடங்களுக்கு உண்டாவதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். மறைமுகத் தொல்லைகள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். விரய செலவுகள் குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஞான மோட்சக்காரகன் கேது உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். நினைத்ததை நடத்தி வைப்பார். தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். போராட்ட நிலையில் இருந்து உங்களை மீட்டெடுப்பார். பூமி காரகன் செவ்வாய் மாதம் முழுவதும் கடகத்தில் நீச்சமடைந்திருப்பதால் விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். மாணவர்களுக்கு அக். 31 முதல் படிப்பில் அக்கறை கூடும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.


சந்திராஷ்டமம்: நவ. 12, 13.

அதிர்ஷ்ட நாள்: அக். 19, 24, 28. நவ. 1, 6, 10, 15.


பரிகாரம்: தில்லை நடராஜரை வழிபட சங்கடங்கள் விலகும்.


ரோகிணி: வாழ்க்கையின் எதார்த்தத்தை உணர்ந்து வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் துலாத்தில் வக்கிரமடைந்திருப்பதால் நோய் நொடி வம்பு வழக்கு என்றிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். மனதில் புதிய நம்பிக்கைப் பிறக்கும். திட்டமிட்டு செயல்படக்கூடிய நிலை உருவாகும். உங்கள் தன குடும்பாதிபதி புதன் அக். 31 முதல் வக்கிர நிவர்த்தியாவதால் பொன் பொருள் சேரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம்வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். அதிசார குருவினால் அதிர்ஷ்டம் கூடும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். கர்மக்காரகன் சனிபகவான் லாப ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரித்தாலும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு நிம்மதியான நிலையை உண்டாக்குவார். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றத்திற்கும் பதவி உயர்வுக்கும் வழியமைப்பார். கடந்த ஒன்றரை வருடமாக ராகு ஜீவன ஸ்தானத்திலும், கேது சுகஸ்தானத்திலும் சஞ்சரித்து வேலை, ஆரோக்கியம், தாயாரின் உடல்நிலையில் சங்கடங்களை வழங்கி வரும் நிலையில் நவ. 13 முதல் ராகு பாக்கிய ஸ்தானத்திற்கும், கேது சகாய ஸ்தானத்திற்கும் செல்வதால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்களாகும் தாயாருக்கு ஏற்பட்ட ஆரோக்கிய கோளாறுகளும் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்களுக்குள் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பெரியோருடைய ஆதரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் நிலை உயரும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாதம் முழுவதும் விவசாயிகள் கவனமாக செயல்படுவதும், மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வதும் நன்மையளிக்கும்.


சந்திராஷ்டமம்: நவ. 13, 14.

அதிர்ஷ்ட நாள்: அக். 20, 24, 29. நவ. 2, 6, 11, 15.


பரிகாரம்: அகோரமூர்த்தியை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.


மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: எடுத்த வேலைகளை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய காரகன் செவ்வாய் மாதம் முழுவதும் சகாய ஸ்தானமான கடகத்தில் நீச்சமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் தடை ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். இதுவரை நன்றாகவே சென்று கொண்டிருந்த வேலைகளிலும் இழுபறியான நிலை ஏற்படும். காரணம் அறியாமல் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிநாதன் சுக்கிரனும் வக்கிரமடைந்திருப்பதுடன், ஆத்ம காரகன் சூரியனும் நீச்சமடைந்திருப்பதால் மாதம் முழுவதும் கவனமாகவும் நிதானமாகவும் யோசித்தும் செயல்படுவது அவசியம். வியாபாரம் தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதற்குமுன் சந்தை நிலவரத்தை அறிந்து கொள்வது நன்மையளிக்கும். உங்கள் நிறுவனத்தையும் தொழில்களையும் உங்களுடைய நேரடி கண்காணிப்பில் வைத்துக் கொள்வது அவசியம். பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களும் யூனிஃபார்ம் சர்வீஸில் இருப்பவர்களும் எல்லா நேரத்திலும் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது அவசியம். உடல்நிலையில் சிறு சிறு சங்கடங்கள் தோன்ற வாய்ப்பு இருப்பதால் சங்கடம் வரும்போதே மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நன்மையளிக்கும். அக். 20 முதல் உங்கள் லாபாதிபதி குரு பகவான் சுகஸ்தானத்திற்கு செல்வதால் வேலை பளு அதிகரிக்கும் என்றாலும், அவருடைய பார்வைகளால் வாழ்க்கையின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தியாகும். மறைமுகத் தொல்லைகள் விலகும். திடீர் வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் பின்னடைவு என்பதெல்லாம் மாறும். வீண் செலவுகள் குறையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும். நிம்மதியான தூக்கமில்லாமல் தவித்து வந்த நிலை மாறும். நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் ஞான மோட்ச்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் தைரியத்துடன் செயல்படக்கூடிய நிலை உருவாகும். விவசாயிகளுக்கு முன்னேற்றமான நிலை இருக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும்.


சந்திராஷ்டமம்: அக். 18. நவ. 14.

அதிர்ஷ்ட நாள்: அக். 24, 27. நவ. 6, 9, 15.


பரிகாரம்: பிரம்ம சிரகண்டீஸ்வரரை வழிபட நன்மைகள் நடக்கும். மனதில் நிம்மதி உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 
temple news
கன்னி.. உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: எந்த இடத்திலும் முதன்மையாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar