காஞ்சிபுரம்: திருஞானசம்பந்தர் இறைபணி, உழவாரப் பணி அறக்கட்டளை மற்றும் ஆதி சிவன் பவுண்டேசன் அமைப்பு சார்பில், மாகாளேஸ்வரர் கோவிலில் நேற்று துாய்மைப் பணி நடந்தது. மாகாளேஸ்வரர் கோவில் வளாகத்தில் வளர்ந்து இருந்த செடிகளை அகற்றினர். பரிவார சன்னிதி கோபுரங்களின் மீது படிந்திருந்த துாசுகளை சுத்தப்படுத்தினர். மேலும், கோவிலில் உள்ள சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள், சுவாமி அலங்கார பொருட்களை சுத்தப்படுத்தினர்.