Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை ஆத்ம லிங்கேஸ்வரர் சுவாமிக்கு ... பரஞ்ஜோதி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை: மனமுருக வழிபட்ட பக்தர்கள் பரஞ்ஜோதி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாங்கூரில் ஒரே இடத்தில் 12 சிவபெருமான் திருகல்யாணம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநாங்கூரில் ஒரே இடத்தில் 12 சிவபெருமான் திருகல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

18 மே
2026
02:05

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருநாங்கூரில் மதங்காஸ்ரமத்தில் மதங்கரிஷி தவம் செய்யும்போது பார்வதிதேவி பெண்ணாக அவதரித்து பின்பு சிவபெருமானை திருமணம் செய்து கொண்டு மதங்க ரிஷிக்கு திருமணக்கோலத்தில் காட்சி கொடுத்ததாகவும், அதைத் தொடர்ந்து 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி  திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் ஐதீக விழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் ரோகினி நட்சத்திரத்தில் நடைபெறுவது வழக்கம் இதனை கொண்டாடும் விதமாக இன்று 12 சிவபெருமான்கள் திருகல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 


அதனை முன்னிட்டு திருநாங்கூர் அஞ்சனாக்ஷி சமேத மதங்கீஸ்வர சுவாமி,  திருக்காட்டுபள்ளி அகிலாண்டேசுவரி  சமேத ஸ்ரீ ஆரண்யேசுவரசுவாமி, திருயோகீசுவரம் யோகாம்பிகை சமேத  யோகநாதசுவாமி, திருசொர்ணபுரம் சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வர சுவாமி, திருநாங்கூர் சந்திராசு அம்பாள் சமேத அமிர்தபுரீசுவர சுவாமி, செம்பதனிருப்பு நற்றுணைநாயகி சமேத   நாகநாதசுவாமி, திருநாங்கூர் நம்பிரியான் சமேத நம்புவார்கன்யசுவாமி, திருநாங்கூர்  காமாட்சி சமேத கைலாசநாத சுவாமி,  திருமேனிக்கூடம் சௌந்தரநாயகி சமேத  சுந்தரேசுவரசுவாமி, பெருந்தோட்டம்  அதிதுல்ய குஜாம்பிகை சமேத ஐராவதேசுவர சுவாமி, அன்னப்பன்பேட்டை   சுந்தரநாயகி சமேத கலக்காமேசுவரசுவாமி, நயினிபுரம் நளினாம்பிகை சமேத நயனவரதேசுவசுவாமி ஆகிய 12 சிவபெருமான் திருநாங்கூர் கீழவீதியில் உள்ள மதங்காஸ்ரமம் எனும் மதங்கீசுவரர் சுவாமி கோயிலில் எழுந்தருளினர். சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு 12 சுவாமி அம்பாள்களும் ரிஷப வாகனங்களில் எழுந்தருளினர். தொடர்ந்து சீர்வரிசை எடுத்து வரப்பட்டு திருமண சடங்குகள் தொடங்கி நடந்தது. பின்னர் 12 சுவாமி அம்பாள் திருக்கல்யாண உத்ஸவம் ஒரே நேரத்தில்  நடைபெற்றது. அதனை அடுத்து திருகல்யாண கோலத்தில் மதங்க ரிஷிக்கு காட்சி கொடுத்தனர். பின்னர் வேதபாராயணம் திருமுறை பாராயணம், கைலாய வாத்தியங்கள், பஞ்சவாத்தியங்கள் நாகசுவர இன்னிசை கச்சேரியுடன் வாணவேடிகைகள் முழங்க 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன்  வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது.  ஆயிரகணக்கான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar