தங்க காப்பு கவசத்தில் அருள்பாலித்த காட்டூர் விளையாட்டு மாரியம்மன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மே 2026 12:05
கோவை; காட்டூர் காளீஸ்வரா மில் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவில் உற்சவ விழா நடந்து வருகிறது. இதில் இன்று வைகாசி மாதம் முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர் காளீஸ்வரர மில் ரோடு ஸ்ரீ விளையாட்டு மாரியம்மன் கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. விழாவில் தங்க காப்பு கவசத்தில் மூலவர் விளையாட்டு மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.