பீளமேடு பெரியமாரியம்மன் கோவில் திருக்கல்யாண திருவிழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2026 12:05
கோவை: பீளமேடு பெரியமாரியம்மன் கோவில் பண்டிகை திருவிழா மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். கடந்த 12ம் தேதி முதல் பல்வேறு நிகழ்வுகள், தொடர்ந்து நடக்கிறது. கடந்த, 26ம் தேதி கரகங்கள் ஆதி விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவில் வந்தடைந்தது. நேற்று அம்மனுக்கு திருகல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, பொதுமக்ககள் பச்சை மாவு, முளைப்பாரியுடன் வந்து அம்மனை தரிசித்தனர். இந்நிகழ்வில், கோவில் டிரஸ்டி நந்தினி ரங்கசாமி, விழா கமிட்டியினர் தியாகு, விஜயகுமார், சந்திரன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாளை கம்பம் களைத்தல் நிகழ்வு, இரவு 9மணிக்கு மேல் நடக்கிறது.