Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை ஜக்கம்மாள் கோவிலில் ... லட்சுமி யானையை இடம் மாற்றியதால் பக்தர்கள் அதிருப்தி லட்சுமி யானையை இடம் மாற்றியதால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று துவக்கம்

பதிவு செய்த நாள்

28 மே
2026
12:05

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில், மூன்று நாள் தேரோட்டம் இன்று துவங்குகிறது.

பொள்ளாச்சி அருகே, பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 11ம் தேதி திருத்தேர் முகூர்த்த கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது.கடந்த, 20ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் காலை மற்றும் இரவு, அம்மன் திருவீதி உலா; பூவோடு எடுத்தல் நடந்தது.

பக்தர்கள் ஈரத்துணியுடன் வேப்பிலை ஏந்தி, வீடு, வீடாக சென்று மடிப்பிச்சை எடுத்தும், அடி அளந்தும் வழிபாடு செய்தனர். நேற்று மாவிளக்கு, பொங்கல் வைத்தல், அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இன்று (28ம் தேதி) மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதற்காக, 50 அடி உயரம் உள்ள அம்மன் தேர், 15 அடி உயரம் உள்ள விநாயகர் தேரும் அலங்கரித்து தயார்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது. கோவில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாளை, 29ம் தேதி மாலை, இரண்டாம் நாள் தேரோட்டம், 30ம் தேதி மாலை, மூன்றாம் நாள் தேரோட்டம் நடக்கிறது. வரும், 31ம் தேதி மதியம், மஹா அபிேஷக பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை புரவி பாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார், அறங்காவலர் குழு தலைவர் கொற்றவேலு, அறங்காவலர்கள் சுதாகர், பாலசுப்ரமணியம், பழனிசாமி, கோவில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத் ஆகியோர் செய்து வருகின்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar