Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் ...  பாலக்காடு பிரசன்ன மஹா கணபதி கோவில் கும்பாபிஷேக தின உற்சவம் பாலக்காடு பிரசன்ன மஹா கணபதி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லட்சுமி யானையை இடம் மாற்றியதால் பக்தர்கள் அதிருப்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
லட்சுமி யானையை இடம் மாற்றியதால் பக்தர்கள் அதிருப்தி

பதிவு செய்த நாள்

28 மே
2026
12:05

விஜயநகரா: உலக பிரசித்தி பெற்ற, ஹம்பியின் விருபாக்‌ஷா கோவில் யானை லட்சுமியை, பக்தர்களின் எதிர்ப்புக்கு இடையே, வனத்துறையினர் கோலாருக்கு இடம் மாற்றியுள்ளனர்.

விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் தாலுகாவில் உள்ள ஹம்பி, உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். இங்குள்ள விருபாக்‌ஷா கோவில் புராதன பிரசித்தி பெற்றதாகும்.  இந்த கோவிலில், லட்சுமி என்ற யானை, பல ஆண்டுகளாக வசிக்கிறது. கோவிலின் பூஜைகள், திருவிழாவின் போது யானை பயன்படுத்தப்படும். மிருதுவான குணம் கொண்ட லட்சுமி யானை, பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமானது. யாருக்கும் எந்த தொந்தவும் கொடுத்தது இல்லை. இங்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணியருக்கு லட்சுமி யானை, நல்ல பொழுது போக்காக இருந்தது.

இந்நிலையில் இந்த யானை, சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்படுகிறது. இதற்கு கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததால், கோலாருக்கு அனுப்ப முடிவு செய்தனர்.ஆனால் யானையை எந்த காரணத்தை கொண்டும், கோலாருக்கு இடம் மாற்ற கூடாது. ஹம்பியில் வைத்து தான் சிகிச்சையளிக்க வேண்டும் என, அப்பகுதியினரும், பக்தர்களும் வலியுறுத்தினர். இது தொடர்பாக, நேற்று முன் தினம் போராட்டமும் நடத்தினர்.இதை பொருட்படுத்தாத வனத்துறை அதிகாரிகள், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, லட்சுமி யானையை லாரியில் ஏற்றி, கோலாருக்கு அனுப்பினர். பகல் நேரத்தில் யானையை அனுப்பினால், அப்பகுதியினர், பக்தர்களின் எதிர்ப்பை சமாளிப்பது கஷ்டம் என்பதால், இரவோடு இரவாக யானையை இடம் மாற்றினர்.

பல ஆண்டுகளாக தங்களின் சொந்த குழந்தையை போன்று, பராமரித்து வந்த லட்சுமி யானையை, லாரியில் ஏற்றும் போது பாகன் குடும்பத்தினர் யானையை கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.  யானைக்கு சிகிச்சை அவசியம் என்பதால், வேறு வழியின்றி யானையை கோலாருக்கு அனுப்பியதாக, வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். @quote@ மனிதர்களுக்கு உடல் நிலை பாதித்தால், எப்படி சிகிச்சை அவசியமோ, அதே போல தான் யானைகளுக்கும் சிகிச்சை அவசியம். ஹம்பியில் கால்நடை சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் இல்லை. எனவே கோலாருக்கு அனுப்பப்பட்டது. நான் அங்குள்ள டாக்டர்களிடம் பேசினேன். மூன்று மாதங்களில் யானை குணமடையும் என, கூறியுள்ளனர். அதன் பின், அந்த யானை மீண்டும் ஹம்பிக்கு அழைத்து வரப்படும் .– கவிதா மன்னிகேரி, கலெக்டர், விஜயநகரா

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar