Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லட்சுமி யானையை இடம் மாற்றியதால் ... மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா விமரிசை மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு பிரசன்ன மஹா கணபதி கோவில் கும்பாபிஷேக தின உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பாலக்காடு பிரசன்ன மஹா கணபதி கோவில் கும்பாபிஷேக தின உற்சவம்

பதிவு செய்த நாள்

28 மே
2026
12:05

பாலக்காடு; பாலக்காடு அருகே, சாத்தபுரம், பிரசன்ன மஹா கணபதி கோவில் கும்பாபிஷேக தின உற்சவம் கோலாகலமாக நடந்தது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கல்பாத்தி அருகில் உள்ள, சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவிலில், வைகாசி மாதம் கும்பாபிஷேக தின உற்சவம் நடப்பது வழக்கம், நடப்பாண்டு உற்சவ நிகழ்ச்சிகள் நேற்று துவங்கியது.  கும்பாபிஷேக தின நாளான, நேற்று காலை, 5:00 மணிக்கு அஷ்டபதி, 5:30க்கு மஹா கணபதி ஹோமம், 6:30 மணிக்கு அபிஷேகம், நித்திய பூஜை நடந்தது. 8:00க்கு மூலவருக்கு பூர்ணாபிஷேகம் நடைபெற்றது.

காலை, 9:30 மணிக்கு ஒற்றைப்பாலம் ஹரியின் தலைமையில், 50 கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்சவாத்தியம் முழங்க, ஆடை ஆபரணங்கள் அணிந்த திருவம்பாடி சந்திரசேகரன் என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பின், 11:30க்கு கும்பாபிஷேகம், 12:15 மணிக்கு புஷ்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது. மதியம், 12:30க்கு கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. மாலை, 5:00 மணிக்கு பஞ்சவாத்தியம் முழங்க, யானை அணி வகுப்புடன் காழ்ச்ச சீவேலி நடைபெற்றது. நாதஸ்வரம் இசை முழங்க, பல்லக்கில் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வோடு உற்சவம் நிறைவடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar