புதுச்சேரி; கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், குருபூஜையொட்டி, இன்று கலச பிரதிஷ்டை செய்து, கணபதி ஹோமம் நடந்தது. குருபூஜை விழாவையொட்டி, கலச பிரதிஷ்டை செய்யப்பட்டு, கணபதி ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ருத்ர ஜபம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான சுவாமிக்கு மகா அபிஷேகம் செய்து, குருபூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.