கள்ளக்குறிச்சி ஏமப்பேர் நவநீத கிருஷ்ணரோட்டில் உள்ள, ராமனுஜர் பஜனை மடத்திற்கு மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியையொட்டி நேற்று முன்தினம் விஷ்வக்ஸேனர் ஆராதனம், வாசுதேவ புண்யாஹம், வாஸ்து சாந்தி, சுதர்சன ஹோமம், கும்ப ஆவாஹனம், யாகசாலை பிரவேசம், விசேஷ ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. இன்று காலை 6 மணிக்கு சுப்ரபாதம், விஸஅவரூபம் நாடி சந்தனம், வேதிகா அர்ச்சனை, ஹோமங்களுக்கு பின் கடம் புறப்பாடு செய்து காலை 10 மணிக்கு கோவில் கலசங்கள், உற்சவர்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.