Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி முருகன் கோவிலில் வைகாசி ... வைகாசி விசாகம் : முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு வைகாசி விசாகம் : முருகன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் கழுவன் திருவிழா
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் கழுவன் திருவிழா

பதிவு செய்த நாள்

30 மே
2026
03:05

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் கழுவன் திருவிழா நடந்தது.


சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலின் வைகாசி விசாகத் திருவிழா மே 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 29 இரவு கழுவன் திருவிழா நடந்தது. பாரம்பரிய முறைப்படி கழுவன் வேடமிட்டவரை கயிற்றால் கட்டி நாட்டார்கள் அமர்ந்திருந்த சபைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயிலுக்குள் திரண்டிருந்த இளைஞர்கள் கழுவனை விரட்டினர். ஒரு காலத்தில் கிராமத்திற்குள் திருட வந்த கழுவனை மக்கள் பிடித்து சிங்கம்புணரி நாட்டார்களிடம் ஒப்படைத்ததாகவும், நாட்டார்கள் அவரை மன்னித்து பரிவட்டம் கட்டி மரியாதையோடு ஊரை விட்டு அனுப்பியதாகவும், ஊர் எல்லையில் படுத்து உறங்கிய கழுவனும் அவரது மனைவி கழுவச்சியும் சேவுகப்பெருமாள் ஐயனாரின் தேர்சக்கரம் ஏறி இறந்ததாக ஐதீகம். மேலும் மதுரையில் பாண்டியர் காலத்தில் நடந்த சமணர் கழுவேற்றம் சம்பவத்தை நினைவு கூறும் வகையிலும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். ஜூன் 1 மதியம் 3:00 மணிக்கு இக்கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழாவின் ... மேலும்
 
temple news
பரமக்குடி;  பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் பூ பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ... மேலும்
 
temple news
மதுரை; கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது: ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; விடுமுறை தினம் யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar