வைகாசி விசாகம் : முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2026 03:05
போடி: போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு தங்க கவச அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.
போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வைகாசி விசாகம் சிறப்பு பூஜைகள் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். தங்க கவச அலங்காரத்தில் முருகன், வள்ளி ,தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராத னைகள் நடந்தது. சுவாமி அலங்காரத் தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் தரிசனம் பெற்றனர்.
* தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் போடி பரமசிவன் கோயிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.