பதிவு செய்த நாள்
22
ஜன
2013
11:01
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கடம்பூர் ஸ்ரீமாரியம்மன் கோயில் திருக்குட முழுக்கு திருவிழா யாகசாலை பூஜைகள் நடந்தது. கோவில்பட்டி அருகே கடம்பூர் இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அம்பிகை ஸ்ரீமாரியம்மன் கோயிலில் நாளை திருக்குட முழுக்கு பெருவிழா நடக்கிறது. இதில் கோயிலில் அமைக்கப்பட்டுள்ள நூதன தங்கக்கொடி மரம் மற்றும் ராஜகோபுரம், அனைத்து விமானங்கள், பரிவார தேவதைகளுக்கும் திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து நேற்று காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், ராஜகோபுர தங்கக்கலசம் திருவீதி உலாவும் நடந்தது. மேலும் நண்பகலில் பூர்ணாகுதி தீபாராதனையும், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும், இரவில் பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. முன்னதாக மாலையில் கோயில் கலசங்கள் அனைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஸ்தாபனம் செய்யப்பட்டது. மேலும் மாலையில் யாகசாலை பூஜை பொருட்களை மேளதாளங்கள், பேண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நாராயணசாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து யாகசாலை மண்டபத்திற்கு எடுத்து வந்தனர். இதையடுத்து யாகசாலை பூஜைகள் செய்வோர் உள்பட குடமுழுக்கு திருவிழா பணிகளுக்கு வந்த அனைவருக்கும் வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்யப்பட்டு யாகசாலை பூஜைகள் துவங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருப்பணிக்குழு தலைவர் சவுந்திரபாண்டியன், செயலாளர் தங்கப்பநாடார், பொருளாளர் சக்கரவர்த்தி, துணை பொருளாளர் அருணாசலம், அறங்காவலர் குழு தலைவர் ஜனார்த்தனன், துணை தலைவர்கள் முத்துக்கனிநாடார், ஜெயராஜ்நாடார், வேல்சாமிநாடார், ராஜசேகர், சந்திரன், துணை செயலாளர்கள் முத்துமாலை, சுரேந்திரன், ராம்குமார், கமிட்டி உறுப்பினர்கள் ஜெயராமன், காளிராஜன், மாடசாமி, கண்ணன், பாஸ்கரன், முருகேசன், மாரியப்பன், சேகர், சந்திரசேகரன், நாராயணன், மகாராஜன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இன்று நான்கு மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும், பூர்ணாகுதி தீபாராதனைகளும் நடக்கிறது.