Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திரசேகரேந்திரர் சுவாமிகள் 133 வது ...  சேஷ வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு சேஷ வாகனத்தில் எமனேஸ்வரம் வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி தேரோட்டத்தில் பறந்த சூரைத் தேங்காய்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 சிங்கம்புணரி தேரோட்டத்தில் பறந்த சூரைத் தேங்காய்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2026
07:06

சிங்கம்புணரி,; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தேரோட்டத்தில் பக்தர்கள் போட்டி போட்டு சூரைத் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இக்கோயில் வைகாசி தேரோட்டத்தின் போது தேர் நிலைக்கு வந்தவுடன் பக்தர்கள் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். எங்கும் இல்லாத வகையில் இங்கு லட்சக்கணக்கான தேங்காய்களை ஒரே நேரத்தில் வீசியெறிந்து உடைக்கப்படும். இன்று மாலை தேர் நிலைக்கு வந்ததும் இருபுறமும் தயாராக இருந்த பக்தர்கள் போட்டிபோட்டு தேங்காய்களை தேரடி படிகள வீசி எறிந்து உடைத்தனர். உடைந்து விழும் தேங்காய்களை சேகரிப்பதற்காக பலர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு சேகரித்தனர். தேர் நிலைக்கு வந்த 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை தொடர்ந்து தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான தேங்காய்கள் உடைக்கப்பட்டது. சிங்கம்புணரி பகுதியில் தென்னந்தோப்புகள் அதிகம் உள்ள நிலையில் தேங்காய் விளைச்சலும் அதிகம். அதனால் இப்பகுதி மக்கள் தேங்காய்களை நேர்த்திக்கடனாக உடைப்பதை தொன்று தொட்டு கடைபிடித்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கோபுரம் மற்றும் சுற்றுச்சுவரில் உள்ள மணல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar