மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2026 04:06
சாயல்குடி; குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கடக ராசி குருவின் உச்சவீடாகும். எனவே இந்த பெயர்ச்சி மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு குரு பகவான் தனது உச்ச வீடான கடகத்தில் சஞ்சரிப்பதால் இந்த மகா குரு பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த குரு பெயர்ச்சி ஜூன் 2, 2026 முதல் 2027 ஜூன் 26 வரை 12 ராசிகளுக்கும் பயன்பாடாக இருக்கும். சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர், பவளநிறவல்லியம்மன் கோயிலில் இன்று காலை 7:00 மணிக்கு குரு பெயர்ச்சி பூஜைகள் நடந்தது. மூலவர் தட்சிணாமூர்த்தி சன்னதி முன்புறம் நடந்த யாக வேள்வியில் புனித குடம் அமைக்கப்பட்டு சங்கல்ப பூஜைகள் நடந்தது. பரிகார ராசிக்காரர்கள் பூஜைகளை மேற்கொண்டனர். பக்தர்களுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. புனிதக்குடம் ஏந்தியவாறு உள்பிரகார புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பவளம் மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.