பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூன் 2026 12:06
சென்னை ; பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த மே 28 ஆம் நாள் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சுவாமி விதி நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. சென்னை, பூந்தமல்லி அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில், சேதமடைந்த பழைய தேருக்குப் பதிலாக ரூ.69 லட்சம் மதிப்பில் புதிய தேர் செய்யப்பட்டது. பிரம்மோற்சவ ஏழாம் நாள் திருத்தேர் வீதி உலா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.