சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பூப்பல்லக்கு உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2026 07:06
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் பூப்பல்லக்கு உற்சவம் நடந்தது.
இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 24 ல் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள் மண்டகப்படியாக தொடர்ந்து நடந்தது. ஜூன் 1 ல் பிரசித்திபெற்ற விசாக தேரோட்டம் நடந்தது. ஜூன் 2ல் பூப்பல்லக்கு உற்சவம் நடந்தது. இதையொட்டி இரவு சுவாமிக்கு அலங்காரம் வழிபாடு செய்யப்பட்டு பூப்பல்லக்கில் எழுந்தருளினார். நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மாடுகள் பூட்டிய சப்பரத்தில் பூரணை, புட்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் ஐயனார் வீதி உலா வந்தார். நான்கு ரத வீதிகள் வழியாக பவனி வந்த பூப்பல்லக்கு காலை 5:00 மணிக்கு கோயில் வாயிலை அடைந்தது. சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டிருந்த மல்லிகை பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.