Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாதனை படைத்த திருப்பதி லட்டு; மே ...  கருட வாகனத்தில் இரட்டைக் குடையுடன் பெருமாள் உலா; வைகையில் கோலாகலம் கருட வாகனத்தில் இரட்டைக் குடையுடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கடஹர சதுர்த்தி விரதம்; விநாயகரை வழிபட வாழ்வில் நன்மைகள் பெருகும், வெற்றி கிட்டும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சங்கடஹர சதுர்த்தி விரதம்; விநாயகரை வழிபட வாழ்வில் நன்மைகள் பெருகும், வெற்றி கிட்டும்!

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2026
07:06

சங்கடஹர சதுர்த்தி விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு உகந்த மிக முக்கியமான விரதமாகும். சங்கடம் என்றால் துன்பம், ஹர என்றால் நீக்குவது என்று பொருள். இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை.

சங்கடஹர சதுர்த்தி விரதம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறை சதுர்த்தி திதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது.இன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடி, விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் (உணவு உட்கொள்ளாமல்) இருப்பது சிறப்பு. இயலாதவர்கள் பால், பழம் மட்டும் உட்கொள்ளலாம். மாலை நேரத்தில் அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விநாயகருக்கு அருகம்புல் சாற்றி, தீபமேற்றி வழிபடலாம்.

விநாயகருக்குப் பிடித்தமான மோதகம், சுண்டல் போன்றவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம். விநாயகர் அகவல், விநாயகர் அஷ்டோத்திரம் போன்ற துதிகளைப் பாராயணம் செய்வது கூடுதல் பலன் தரும். அன்று இரவு விநாயகரைத் தரிசித்த பின்னரே உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு எக்காலத்திலும் தீராத கஷ்டங்கள், கடன் பிரச்சினைகள் மற்றும் மனவேதனைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். வீட்டில் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட வேண்டியது நிறைவேறும்.!

இன்று வாஸ்து நாள்; வாஸ்து பூஜை செய்ய நல்ல நேரம் காலை 9:58 – 10:34 மணி.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar