Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீமக்கவுண்டர்பாளையம்: ...  அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசி தெப்பத் திருவிழா அரியக்குடி திருவேங்கடமுடையான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீஞ்சூர் வரதராஜ பெருமாள் உலா வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீஞ்சூர் வரதராஜ பெருமாள் உலா வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2026
08:06

மீஞ்சூர்: பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, மீஞ்சூர் வரதராஜ பெருமாள் தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், கடந்த மாதம், 28ல் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் தொடங்கியது.

தொடர்ந்து, சூர்ய பிரபை, சந்திர பிரபை, கருடசேவை, அனுமந்த வாகனம், கேடய புறப்பாடு, நாக வாகனம், ஆளும் பல்லக்கு, ஹம்ச வாகனம், பெருமாள் – தாயார் திருக்கல்யாணம், யானை வாகனம் உள்ளிட்ட உத்சவங்களும், தினமும் திருவீதி உலாவும் நடந்தன.

பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாளான நேற்று, தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. காலை 9:00 மணிக்கு நிலையில் இருந்து புறப்பட்ட தேர், மாடவீதிகள் வழியாக வலம் வந்தது.

வண்ண மலர்கள், துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் உற்சவ பெருமாள் வீற்றிருந்தார்.

வாண வேடிக்கை, மங்கள இசையுடன், ‘கோவிந்தா, கோவிந்தா’ என, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

பக்தர்களுக்கு குளிர்பானம், மோர் மற்றும் உணவு பொருட்களை, தன்னார்வலர்கள் வழங்கினர். மின் வாரியம், காவல் மற்றும் தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் அருகே சிவனாரகரம்  சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடந்த சத்ரு சம்ஹார வேல் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் ‘கடை ஞாயிறு விழா’ இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar