பதிவு செய்த நாள்
23
ஜன
2013
11:01
சேலம்: சேலம் அருகே உள்ள கங்கை அம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.
சேலம் அருகேயுள்ள அமானி அய்யம்பெருமாம்பட்டியில், கங்கை அம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 17ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடந்தது. சென்றாய பெருமாள் கோவிலில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து, மெயின் ரோடு வழியாக சென்று, கங்கை அம்மன் கோவிலை வந்தடைந்தனர். இன்று காலை, 6.45 முதல், 7.45 மணிக்குள் கங்கை அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. சென்றாய பெருமாள் கோவில் அர்ச்சகர்கள் ராமகிருஷ்ண ஐயர், லோகநாதய்யர், கோபால கிருஷ்ணய்யர் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.