பெருமாள் கோவிலில் தரப்படும் துளசி தீர்த்தம், நிறைய நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் உள்ளது. கல்லீரல் மற்றும் மண்ணீரல் கோளாறுகளுக்கும் இந்த துளசி தீர்த்தம், நல்லதொரு மருந்தாக அமைகிறது. கல்லீரல் கெட்டுப் போனாலோ அல்லது சிதைந்தாலோ, மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பு கல்லீரல் மட்டும்தான்.
அதிக புகை மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள், இரவில் அதிக நேரம் கண் விழிப்பவர்கள், அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்பவர்கள், அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான், கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு போன்றவை வர அதிக வாய்ப்பு உள்ளது. துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் வடிகட்டி, அந்த நீரை மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே, கல்லீரல், மண்ணீரல் கோளாறுகள் சரியாகிவிடும் போது, வேறு சில மூலிகைகள் கலந்த பெருமாள் கோவிலில் கொடுக்கும் துளசி தீர்த்தம் மிகவும் மகத்துவம் வாய்ந்தாகவும், கல்லீரலை சீக்கிரம் குணப்படுத்துவதாகவும் இருக்கும்.