Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாளுக்கியர்களின் சிற்ப கலைக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
பெங்களூரின் புராதன கோவில் தோஷங்களை நீக்கும் நாகம்மா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெங்களூரின் புராதன கோவில் தோஷங்களை நீக்கும் நாகம்மா

பதிவு செய்த நாள்

29 செப்
2026
11:09

பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன கோவில்களை தரிசிக்கலாம். அம்பாள் கோவில்களும் உள்ளன. இவற்றில் நாகம்மா கோவிலும் ஒன்று.

பெங்களூரு மடிவாளா பி.டி.எம்., முதல் ஸ்டேஜில் நாகம்மா கோவில் அமைந்துள்ளது.

சக்தி வாய்ந்த பெண் தெய்வமான நாகம்மா, இங்கு குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெரிய அரச மரத்தின் நிழலில், அமைதியான சூழலில் கோவில் அமைந்திருப்பது, கோவிலின் மற்றொரு சிறப்பாகும். இங்கு வந்து அம்பாளை தரிசனம் செய்தால், மனதில் அமைதியும், நிம்மதியும் ஏற்படும்.

பெங்களூரின் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்றாகும். நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவில் பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், அமாவாசை, பவுர்ணமி நாட்களில், பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும். பெயருக்கு தகுந்தார் போன்று நாக தோஷத்தை நீக்குவதில், நாகம்மா பிரசித்தி பெற்றவர்.

இங்கு வந்து அம்பாளை தரிசித்து, மனமுருக பிரார்த்தனை செய்தால், தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

நாக தோஷத்தால் திருமணம் தடை பட்டால், திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத தம்பதியர், நாகம்மா கோவிலுக்கு வந்து வேண்டினால் திருமணம் கைகூடும். குழந்தை வரம் கிட்டும். இதனால், தொலைவில் உள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

ஆண்டுதோறும் இந்த கோவிலில் கோலாகலமாக திருவிழா நடக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகைகளின் போது, கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

ஆடி மாதம் கூழ் வார்க்கப்படும். வளமான வாழ்க்கையை விரும்புவோர், ஒரு முறை நாகம்மாவை தரிசனம் செய்யுங்கள்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 
temple news
* நல்லதைச் செய். உனக்கு நல்லதே நடக்கும். * அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. வாழ்நாள் முழுவதும் படி.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar