Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீதை, பக்தி யோகத்தை பரப்பும் விஜய ... பெங்களூரின் புராதன கோவில் தோஷங்களை நீக்கும் நாகம்மா பெங்களூரின் புராதன கோவில் ...
முதல் பக்கம் » துளிகள்
சாளுக்கியர்களின் சிற்ப கலைக்கு சான்றாக மலை மீதுள்ள பழமையான சிவன் கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சாளுக்கியர்களின் சிற்ப கலைக்கு சான்றாக மலை மீதுள்ள பழமையான சிவன் கோவில்

பதிவு செய்த நாள்

29 செப்
2026
11:09

பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., 7ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. மலேகட்டி என்றால், ‘மாலை தொடுப்பவர்’ என கன்னடத்தில் பொருள். பாதாமியின் வடக்கு குன்றில் அமைந்த இக்கோவில், மிக நேர்த்தியான முறையில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கருவறை சதுர வடிவத்தை கொண்டது. மூலவரான சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார்.

இக்கோவிலின் வெளிப்புற சுவர்களில் சிவபெருமானின் மற்ற வடிவங்கள், விஷ்ணுவின் மற்ற வடிவங்கள் அழகாக பொறிக்கப்பட்டு உள்ளன. இக்கோவில் அக்காலத்தில், ஆன்மிக தலமாக மட்டுமின்றி, எதிரிகளை கண்காணிக்கும் பாதுகாப்பு அரணாகவும் இருந்ததாக வரலாறு கூறுகிறது.

இந்த கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியே மட்டுமே வர முடியும். கோவிலிலிருந்து, ஒட்டுமொத்த நகரத்தையும் பார்க்கலாம். இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது. காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். இருப்பினும், மதிய வேளையில் வெயில் அதிகமாக இருக்கும் சமயத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

இங்குள்ள சிவபெருமானை மனமுருகி வேண்டினால், கண் நோய்கள் குணமாகும், தோல் வியாதிகள் நீங்கும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. சாளுக்கியர்களின் சிற்ப கலையை ரசிக்கலாம். அதுபோல, சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் ஆகியவற்றை கோவிலிலிருந்து பார்ப்பது சிறந்த அனுபவத்தை தரும்.

எப்படி செல்வது?

பஸ்: பெங்களூரிலிருந்து 500 கி.மீ., தொலைவில் பாதாமி உள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து, பாகல்கோட் பஸ் நிலையத்திற்கு செல்லவும். அங்கிருந்து பஸ் மூலம் 35 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.

ரயில்: பெங்களூரு கே.எஸ்.ஆர்., ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் பெலகாவி ரயில் நிலையத்தை அடையலாம். அங்கிருந்து லோக்கல் பஸ்கள் மூலம் பாதாமியில் உள்ள கோவிலை அடையலாம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 
temple news
* நல்லதைச் செய். உனக்கு நல்லதே நடக்கும். * அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. வாழ்நாள் முழுவதும் படி.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar