Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புகழ் பெற வேண்டுமா சாளுக்கியர்களின் சிற்ப கலைக்கு சான்றாக மலை மீதுள்ள பழமையான சிவன் கோவில் சாளுக்கியர்களின் சிற்ப கலைக்கு ...
முதல் பக்கம் » துளிகள்
கீதை, பக்தி யோகத்தை பரப்பும் விஜய விட்டலா கோவில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கீதை, பக்தி யோகத்தை பரப்பும் விஜய விட்டலா கோவில்

பதிவு செய்த நாள்

29 செப்
2026
11:09

பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப விஜய விட்டலா கோவில் உள்ளது. விஸ்வ சாந்தி ஆசிரமத்தின் வளாகத்தில் அமைந்துள்ள இக்கோவில், உலக அமைதியை வலியுறுத்தியும், கீதை மற்றும் பக்தி யோகத்தை பரப்பும் வகையிலும், கடந்த 1982ம் ஆண்டு சந்த்கேஷவதாஸ் சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்டது.

சிற்ப கலைகள் நிறைந்த இந்த கோவிலின் பிரதான அமைப்பு, ஐந்து குதிரைகள் பூட்டப்பட்ட பிரமாண்ட ரத வடிவில் கட்டப்பட்டுள்ளது. இதன் உட்புற சுவர்களில் உள்ள கிரானைட் கற்களில் பகவத் கீதையின் 700க்கும் மேற்பட்ட சுலோகங்கள் சமஸ்கிருதம், கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

கோவிலின் மேல் தளத்தில் மஹா விஷ்ணுவின் பிரமாண்ட வடிவமான 65 அடி உயர விஸ்வரூப நாராயணர் சிலை உள்ளது. உலகில் மிக உயரமான உட்புற மஹாவிஷ்ணு சிலைகளில் இதுவும் ஒன்றும் என்று போற்றப்படுகிறது. கோவிலுக்குள் நுழையும் போதே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 36 அடி உயரமுற்ற பிரமாண்ட விஜய விட்டலரின் கம்பீரமான கருங்கல் சிலையையும் தரிசிக்கலாம்.

மேலும் கோவில் வளாகத்தில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி ஆகிய 7 நதிகளை பிரதிபலிக்கும் நதி தேவதைகளின் அரிய கலைநயமிக்க சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. 15 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள ஆசிரமத்தில், அஷ்டலட்சுமிகள், விநாயகர், சிவன், ராமர் ஆகியோரின் சன்னிதிகளும், துர்காதேவி கோவிலும் உள்ளது. தியானம் செய்வதற்கு என பிரத்யேக மண்டபம் உள்ளது. வாரத்தின் அனைத்து நாட்களும் கோவில் திறந்து இருக்கும்.

காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். நுழைவு கட்டணமாக ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. புகைப்படம் எடுக்க 20 ரூபாய் கட்டணம்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 
temple news
* நல்லதைச் செய். உனக்கு நல்லதே நடக்கும். * அறிவுக்கு முற்றுப்புள்ளி வைக்காதே. வாழ்நாள் முழுவதும் படி.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar